புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள உணவு விடுதிகள், டீக்கடைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதற்கேற்ப விற்பனையாளர்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொசக் கடை வீதியில் உள்ள பட்டினத்தார் என்ற பழமை வாய்ந்த டீக்கடையில் பாரம்பரிய விளையாட்டுகளை நினைவூட்டும் விதமாக டீக்கடை முழுவதும் அதன் ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த டீக்கடையில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடும் தவிர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மண்பானை கப்புகளும், கண்ணாடி குடுவைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்த டீக்கடையில் கம்மங்கூழ், சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்ட உணவு பொருள்களும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இக்கடைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஓவியங்களை பார்த்து வியந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: சமையலறையில் தொங்கவிட்டிருந்த ஓவியம்... 46 கோடி மதிப்பா என அதிர்ச்சியில் மூதாட்டி!