புதுச்சேரி அடையாளங்களில் ஒன்றான சண்டே மார்க்கெட் கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் மூட அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு தளர்வுகளில் பல பெரிய வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சாலையோரம் வியாபாரம் செய்யும் சண்டே மார்க்கெட் திறக்க அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
சண்டே மார்க்கெட்டில் கடை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கக் கோரி ஏஐடியூசி, சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் சட்டசபை முன்பு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடர் தர்ணா போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
சங்கத் தலைவர் பாபு தலைமையில், நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏஐடியூசி மாநில பொது செயலாளர் சேது செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இன்று (அக்டோபர் 1) நடைபெற்ற போராட்டத்தில் சண்டே மார்க்கெட்டில் விற்பனை செய்யும் பொருட்களான புடவைகள், துணி வகைகள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை கடை விரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வியாபாரிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சண்டே மார்க்கெட் திறக்க அனுமதி கேட்டு வியாபாரிகள் நூதன போராட்டம்
புதுச்சேரி: சண்டே மார்க்கெட் திறக்க அனுமதி கேட்டு வியாபாரிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.