புதுச்சேரி: புதுச்சேரி அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த தீர்மானத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளக் கோரி மத்திய அரசு அந்த கோப்பை திருப்பி அனுப்பியது.
இந்த தீர்மானத்திற்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் வழங்கக்கோரி, நேற்று முன்தினம் முதல் புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தச்சூழ்நிலையில், புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆளுநர் மாளிகையை திடீரென முற்றுகையிட்டனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து நான்கு பேருந்துகளில் வந்த மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கல்யாண சுந்தரத்தை கைது செய்து வேனில் ஏற்றினர். மேலும், மாணவர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.
இதையும் படிங்க: புதுச்சேரி அரசுப் பள்ளிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்ட ஆணை: பொதுமக்கள் எதிர்ப்பு