நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைக் கண்டித்து புதுச்சேரியிலும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில், புதுவை மாணவர்கள் கூட்டமைப்பினரும் தங்களது பங்கிற்கு, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள துப்ளக்ஸ் சிலை பின்பு கருமாதி செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை வைத்து, மாணவர்கள் கூட்டமைப்பினர் கடலில் பிண்டம் வைத்து கருமாதி செய்தனர். பின்னர் அந்தப் பிண்டம் கடலிலும் கரைக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் இதுபோன்ற மோசமான செயல்பாடுகளைக் கண்டித்து புதுவை மாநில மாணவர்கள் கூட்டமைப்பினர் நடத்திய நூதனப் போராட்டம் அப்பகுதியினரிடையே பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: 5 மாநில முதலமைச்சர்களின் அதிரடி!