ETV Bharat / bharat

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - சட்டப்பேரவை உறுப்பினர் வெளிநடப்பு - புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பி வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

author img

By

Published : Feb 11, 2020, 7:42 PM IST

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலகத்திலுள்ள கருத்தரங்கக் கூடத்தில் இன்று நடைபெற்றது.

அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் அஸ்வின் குமார் தாமதமாக வந்ததால் அங்கே கூடியிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர் சிவா புதுச்சேரியில் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், இருக்கும் நிதியை வைத்து ஏன் மேம்பாட்டுப் பணிகளை இன்னும் தொடங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்

தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன், ”ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தலைவர், அம்மாநில தலைமைச் செயலரான அஸ்வின் குமார். ஆனால் கூட்டத்தில் அவர் இல்லை. அவர் இல்லாமல் கூட்டம் தேவையா? மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டும் காலத்தோடு ஏன் பணிகள் தொடங்கப்படவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன்,பாஸ்கர் ஆகியோரும் இதே கருத்தைத் தெரிவித்தனர். பின்னர் தலைமைச் செயலர் இல்லாத கூட்டம் எதற்கு எனக் கேள்வியெழுப்பி, கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து, தலைமைச் செயலர் அஸ்வின் குமார் கூட்டத்திற்கு வந்து பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் பல்வேறு திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது என்றும் இதுகுறித்து ஆய்வு செய்யவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது என்றும் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் தொழில் செய்ய தடை

Intro:புதுவையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது

Body:புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் தலைமைசெயலகம் கருத்தரங்க கூடத்தில் இன்று நடைபெற்றது பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஸ்வின் குமார் தாமதமாக வந்ததால் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிவா புதுவையில் நிதி நெருக்கடி உள்ள நிலையில் இருக்கிற பணத்தை வைத்து ஏன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்

தொடர்ந்து லட்சுமணன் எம்எல்ஏ கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டியின் திட்டத்தின் தலைவர் தலைமை செயலர் அஸ்வின் குமார் என்றும் ஆனால் கூட்டத்தில் அவர் இல்லை அவர் இல்லாமல் கூட்டம் தேவையா மத்திய அரசிடமிருந்து பணம் வந்து காலத்தோடு ஏன் பணி தொடங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் ,பாஸ்கர் அவர்களும் இதே கருத்தை தெரிவித்தனர் பின்னர் தலைமைச் செயலர் இல்லாத கூட்டம் எதற்கு என்றும் கேள்வி எழுப்பி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இதனைத்தொடர்ந்து சிறிது நேரம் கழித்து தலைமை செயலர் கூட்டத்தில் வந்து பங்கேற்றார் அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம் புதுவை மாநிலத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டம் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் நடைமுறைப்படுத்த அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது என்றும் அதன் அடிப்படையில் என்னென்ன திட்டங்கள் ஸ்மார்ட்சிட்டிக்கு எடுக்கப்பட்டு நடந்து வருகிறது இந்த பணிகள் எந்ததிட்டத்தில் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய கூட்டம் கூட்டப்பட்டது என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்

Conclusion:புதுவையில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.