ETV Bharat / bharat

புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளருக்கு கரோனா - பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து - Congress leader Sanjay Dutt

புதுச்சேரி : காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்துக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது புதுச்சேரி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Puducherry programs of Congress leader Sanjay Dutt canceled

author img

By

Published : Sep 25, 2020, 1:33 AM IST

அகில இந்திய காங்கிரஸ் செயலரும், புதுச்சேரி பொறுப்பாளருமான சஞ்சய் தத் நேற்று (செப்.24) புதுச்சேரிக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 23ஆம் தேதி இரவு, சஞ்சய் தத்தின் வருகை தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் எனது பயணதை தொடங்கும் முன் கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறேன்.

கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.