புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் கரோனா நோய்த் தடுப்பு குறித்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாளை முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்களும் மூடப்படும் என்றும், மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மக்கள் வெளியில் நடமாடுவது வேதனையளிப்பதாக தெரிவித்த அவர், இதனைத் தடுக்க நாளை முதல் வீட்டைவிட்டு வெளியில் செல்பவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: நாளை முதல் ஊரடங்கு உத்தரவு - அத்தியாவசிய பொருள்களை வாங்க குவிந்த மக்கள்!