ETV Bharat / bharat

‘காமராஜ் நகர் வெற்றி எங்களுக்கு தீபாவளிப் பரிசு’ - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

author img

By

Published : Oct 24, 2019, 1:43 PM IST

புதுச்சேரி: காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் குமார் வெற்றி பெற்றதைத் நாங்கள் தீபாவளிப் பரிசாக ஏற்கிறோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Narayanasamy

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாராயணசாமி தொண்டர்களைச் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் நலத்திட்டங்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்பதை காங்கிரஸ் கட்சி மக்களிடம் எடுத்துக் கூறியதை மக்கள் ஏற்றுக்கொண்டு காமராஜ் நகர் தொகுதியில் ஜான்குமாரை வெற்றி பெற வைத்துள்ளனர். காமராஜ் நகர் வெற்றி இமாலய வெற்றியாகும்.

காமராஜ் நகர் இடைத்தேர்தல் வெற்றி எங்களுக்கு தீபாவளிப்பரிசு - நாராயணசாமி

இந்த வெற்றியை தீபாவளி பரிசாக ஏற்றுக்கொள்கிறோம். என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை மாறாக எதிரிக்கட்சியாகவே செயல்படுகின்றனர். மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்க தவறிய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது" என்றார்.

இதையும் படிங்க: 'என் நெஞ்சில் குடியிருக்கும்...' ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தளபதி! #Thalapathy64

Intro:காமராஜர் நகர் தொகுதி வெற்றி இமாலய வெற்றி காங்கிரஸ் கூட்டணி அரசை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாராயணசாமி தொண்டர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் நாராயணசாமி

காமராஜர் நகர் தொகுதி வெற்றி இமாலய வெற்றி என்றும் காங்கிரஸ் கூட்டணி அரசை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று முதல்வர் நாராயணசாமி பேசினார்

மக்கள் நலத்திட்டங்களுக்கு கிரன்பேடி தடையாக உள்ளார் என்பதை காங்கிரஸ் கட்சி மக்களிடம் எடுத்துக் கூறியதை மக்கள் ஏற்று உள்ளனர் என்பதை காமராஜ் நகர் தொகுதி காட்டியுள்ளது காமராஜர் நகர் தொகுதி வெற்றியை தீபாவளி பரிசாக ஏற்றுக்கொள்கிறோம் என்று முதல்வர் நாராயணசாமி பேட்டியின்போது தெரிவித்தார் என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக செயற்படவில்லை அவர்கள் எதிரிக்கட்சி ஆகவே செயல்படுகின்றனர் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க தவறிவிட்டனர் அதனால் மக்கள் என்ஆர் காங்கிரஸ் கட்சியை புறக்கணித்துள்ளனர் என்பது தேர்தல் மூலம் தெரிகிறது என்றார்

Conclusion:காமராஜர் நகர் தொகுதி வெற்றி இமாலய வெற்றி காங்கிரஸ் கூட்டணி அரசை மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.