புதுச்சேரியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி இருக்கிறது. இந்தக் கல்லூரியில் ஏற்கனவே 200 மருத்துவ இடங்கள் இருந்த நிலையில், தற்போது 249 மருத்துவ இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய இடஒதுக்கீட்டில் 10 விழுக்காடு வழங்குவதையொட்டி இந்த இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த இடங்களில் இதுவரை, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணாக்கருக்கு 54 இடங்கள் மட்டுமே கிடைத்துவந்த நிலையில், இனிமேல் அதாவது, 2020-2021ஆம் கல்வியாண்டு முதல், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணாக்கருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் மொத்தம் 65 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
இதனை மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாணவ, மாணவிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர்.