புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அம்மாநிலச் சுகாதாரத் துறைச் செயலர் பிரசாந்த் குமார் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாளுக்கு நாள் புதுச்சேரியில் கரானா தொற்று அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம், வெளிமாநிலங்களிலிருந்த புதுச்சேரி மக்கள் சொந்த ஊருக்குள் வந்ததுதான். மேலும் உள்ளூர் மக்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் நோய்ப் பரவலுக்குக் காரணமாக இருக்கிறது.
எனவே, மக்களுக்குச் சிறிதளவு நோய் அறிகுறிகள் இருந்தால் கூட அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும். எல்லோருக்கும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். மேலும் ஆரோக்கிய சேது செயலியை மக்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்