கரோனா வைரஸ் தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "புதுச்சேரியில் 9 பேரும், காரைக்காலில் ஒருவரும், மாகியில் 2 பேரும் கரோனா தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிப்படைந்த 22 நபர்களில் 10 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5829 பேருக்கு உமிழ் நீர் சோதனை மேற்கொண்டதில் 5762 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக வெளி நாடுகளிலிருந்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் புதுச்சேரிக்கு வருவது அதிகரித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் காவல் துறையினர் சமரசம் செய்துகொள்ள கூடாது, தற்போது கரோனா தொற்று பாதிப்பான இரண்டு நபர்களும் குவைத்திலிருந்து வந்தவர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம்