புதுச்சேரியில் நேற்று அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாகூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர், புதுச்சேரியில் தனது பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினார். இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்தில், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சட்டமன்ற உறுப்பினர் ஆதாரமின்றி பேசுகிறார். பாகூர் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உயிர்காக்கும் மருந்துகளும் அனைத்து உண்டு.
இம்மாத இறுதியில் 121 மருத்துவர்களும் 40 செவிலியர்களளும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான அனைத்து மருத்துவ இயந்திரங்கள் மூலம் மருத்துவ உபகரணங்களும், ஏப்ரல் மாதம் மாதம் முதல் வாரத்தில் அளிக்கப்பட உள்ளது. அனைத்து கிராம சுகாதார நிலையங்களிலும், ஒரு மருத்துவர், செவிலியர் என்ற அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வரும் கூட்டத்தை குறைப்பதற்காக அனைத்து கிராம சுகாதார நிலையங்களிலும் மருத்துவ வசதி செய்யப்பட்டுவருகிறது” என்றார்.
இதையும் படிங்க: தன்னிச்சையாக செயல்படும் கிரண்பேடி - முதலமைச்சர் குற்றச்சாட்டு