இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “புதுவையைச் சேர்ந்த மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மாகே பகுதியில் ஒருவருக்கும், ஜிப்மரில் மூன்று பேருக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் ஏழு பேருக்கு நோய் தோற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்திலுள்ள நான்கு பிராந்தியங்களில் இரண்டாயிரத்து 698 பேருக்கு மருத்துவ ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் இரண்டாயிரத்து 583 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 106 பேரின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த 20 நாட்களில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று மருத்துவ ஆய்வு மேற்கொண்டதில், புதுவை மாநிலத்தில் இதுவரை 13 லட்சத்து 75 ஆயிரத்து 238 பேருக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மற்ற மாநிலங்களிலிருந்து மக்கள் தற்போது சொந்த ஊர் திரும்பிவருவதால் மாநிலம் முழுவதும் இரண்டாவது மருத்துவ ஆய்வு நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
புதுவையில் செப்டம்பர் மாதம் வரையில் மக்களுக்கு அளிக்கப்படுவதற்கான மருந்துப் பொருள்கள் கையிருப்பு உள்ளதாகவும், கூறினார்.
ஏனாம், காரைக்கால் ஆகிய பகுதிகள் பச்சை மண்டலமாகவும், புதுவை, மாகே ஆகிய நகரங்கள் ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக புதுவையில் சீல் வைக்கப்பட்டு உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பச்சை மண்டலமாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராஜினாமா செய்யப்போகிறேன்! மல்லாடி கிருஷ்ணாராவ் மிரட்டல்!