ETV Bharat / bharat

'மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்'

புதுச்சேரி: மருத்துவப் படிப்பிற்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு பெற அரசு உச்சநீதிமன்றத்தை நாடும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

puducherry government seeks court for medical reservation

author img

By

Published : Jun 10, 2020, 7:28 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”புதுச்சேரியில் ஒருவருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பரவியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று உயிரிழந்தார். அவருடைய இழப்பு திமுகவிற்கு பெரும் இழப்பாகும். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில், பாஜக மாநில தலைவர் சாமிநாதன், துணை சபாநாயகர் ஆகியோர் அலுவலத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இது மத்திய அரசின் உத்தரவை மீறும் செயல்.

மருத்துவ, மருத்துவ முதுநிலைப் படிப்பில் மத்திய அரசு இடஒதுக்கீட்டினைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை. குறிப்பாக, மலைவாழ் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பிற்கு பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்த மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு பெற புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தை நாடும்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் பல வகைகளில் மாநில அரசின் வருவாய் பாதிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறார். மதுபானத்தின் விலை குறைக்க வலியுறுத்தியும் குறைக்காததால், மாநில வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசானது மாநிலங்களுக்கு நிதியுதவியைச் செய்ய வேண்டும்.

தொழில்களைக் காப்பாற்ற கடனுதவி வழங்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். மாநில அரசின் வருவாயை உயர்த்த மாநில அரசுக்கு உதவ வேண்டும். கரோனா வைரசிலிருந்து மக்களைக் காக்க வென்டிலேட்டர், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும், அக்கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் உள்ளது. இது மிகவும் வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.