புதுச்சேரி லாசுப்பேட்டை உயர் கல்வித்துறை அலுவலகத்தில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உயர்கல்விதுறை செயலர் அன்பரசு, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கல்வித்துறை செயலர் அன்பரசு பேசுகையில், “ கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்து பல்கலை மானியக் குழு பரிந்துரைத்தன்பேரில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் வாரம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.
முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல், அவர்கள் கடந்த சுழற்சியில் பெற்ற தேர்ச்சி விகிதம் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும். அதன்படி அடுத்தாண்டு வகுப்புக்கு செல்வார்கள். ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தருவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கேரளாவில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு தேர்வுகள் தொடக்கம்!