புதுச்சேரி துணை சபாநாயகர் பாலன் தனது தொகுதியான அரும்பார்த்தபுரம் பகுதியலுள்ள அரசு மருத்துவமனை ஆய்வுக்குப் பின் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த துர்கா என்ற கர்ப்பிணிக்கு அங்கிருந்த ரெட்டியார் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் பூஞ்சான் பிடித்திருந்தது. காலாவதியான மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
அங்கிருந்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் உடனடியாக இந்த மாத்திரையை வழங்குவது நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினேன்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி ரெட்டியார் பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மாத்திரைகள் தரமற்றது என்றும் இதனை ஆய்வு செய்ததில் காலாவதியான மாத்திரை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அரசு மருத்துவமனை இயக்குநர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் துணை சபாநாயகர் பாலன் தெரிவித்துள்ளார்.