புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் இருந்தபடி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "புதுச்சேரியில் புதிதாக மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போதைய நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 63ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 36ஆகவும் உள்ளது.
புதுச்சேரியில், கரோனா தொற்று தினம்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும. ஏற்கனவே புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 30ஐ கடந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இதே நிலை நீடித்தால் புதுச்சேரி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.