ETV Bharat / bharat

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகள் - ஆட்சியர் அருண் அறிவிப்பு - புதுச்சேரி ஆட்சியர் அருண்

புதுச்சேரி: புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் அறிவித்துள்ளார்.

Puducherry collector Arun
புதுச்சேரி ஆட்சியர் அருண்
author img

By

Published : Sep 1, 2020, 8:20 AM IST

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து கடைகளும் திறந்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம்.

இரவு 9 மணி முதல் காலை 5 மணிவரை தனிநபர்கள், வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கடற்கரை சாலை திறந்திருக்கும்.

Curfew relaxation in puducherry
புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுகள்

பள்ளி-கல்லூரி, கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். சமூக, கல்வி, கலாசாரம், மதம், அரசியல் நிகழ்வுகள் செப்டம்பர் 21ஆம் தேதிமுதல் 100 பேருக்குள்பட்டு பங்கேற்று, நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புதுவையில் குறையத் தொடங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.