சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினம் இந்தியா முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, ”மோடி ஆட்சியில் இப்பொழுது பொருளாதாரம் வீழ்ச்சி மட்டுமில்லை, தனிமனித சுதந்திரம் கேள்விக்குறி ஆகியுள்ளது. விலைவாசியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதை விட்டுவிட்டு அரசை விமர்சனம் செய்யும் அரசியல் கட்சித் தலைவர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்றார்.
மேலும், “நாட்டில் தற்போது பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும். தெலங்கானாவில் திஷாவை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, இறைவன் கொடுத்த தண்டனை. இதன்மூலம் குற்றவாளிகள் பாடம் கற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா மக்கள் கொண்டாடும் ரியல் சிங்கம்!