புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பாரதி, சுதேசி பஞ்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் விருப்ப ஓய்வுமூலம் வெளியே செல்லலாம் என அறிவித்து, அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியிருந்தோம்.
ஆனால், ஆளுநர் பஞ்சாலைகளை மூட உத்தரவிட்டு கோப்புகளை அனுப்பியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். பாரதி, சுதேசி பஞ்சாலைகளில் 200 தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதிய பணமான 1 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்க ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பினோம். ஆளுநர் அலுவலர்களை மிரட்டி ஆலைகளை மூடச் செய்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆட்சிக்கு அவப்பெயரை வாங்கித் தர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆலைகளுக்கு மூடுவிழா நடத்துகிறார்.
மூடுவிழா நடத்துவதற்கு ஆளுநர் தேவையா? அதுதான் அவர் வேலையா? இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் வெகுதூரம் இல்லை. கிரண்பேடி துணைநிலை ஆளுநராகச் செயல்படாமல், மக்களுக்கு விரோதமான செயலில் ஈடுபட்டுவருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: பஞ்சாலைத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்குமா புதுச்சேரி அரசு