எழுத்தாளர் மனோஜ் தாஸ் (86), கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியில் அரவிந்தர் வீதிக்கு அருகில் வசித்துவருகிறார். ஆங்கிலம், ஒடியா ஆகிய இருமொழி எழுத்தாளரான இவர் அம்மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியம், கல்வித் துறையில் இவரின் பங்களிப்புக்காக சாகித்ய அகாதமி விருதும், 2000ஆம் ஆண்டில் சரஸ்வதி சம்மான் விருதும், 2001ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தற்போதும் பல்வேறு ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிவருகிறாா். தற்போது அவருக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருதை அறிவித்துள்ளதை அடுத்து குடியரசுதின நாளில் துணை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் அளித்த தேநீர் விருந்தின்போது இவரைக் அழைத்து கவுரவித்து பாராட்டினார்.
இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, எழுத்தாளர் மனோஜ் தாஸை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன், முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படியுங்க: எளிய மனிதனின் அசாதாரண சாதனை! - பழ வியாபாரியும் பத்மஸ்ரீ விருதும்