ETV Bharat / bharat

நிதியமைச்சர் அறிவிப்பில் ஏழைகளுக்கு ஒன்றுமில்லை! - puducherry cm byte

புதுச்சேரி: ஏழை எளிய மக்களிடம் எவ்வாறு நிதி கையிருப்பை உருவாக்குவது, அவர்களுக்கு எவ்வாறு நிதியை பகிர்ந்தளிப்பது போன்ற எந்த அம்சமும் மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
author img

By

Published : May 14, 2020, 10:53 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "புதுச்சேரியில் நேற்று 41 பேருக்கு உமிழ்நீர் சோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் குணமடைந்துள்ளார். இதனால், ஆரஞ்சு மண்டலமாக இருந்த காரைக்கால் தற்போது பச்சை மண்டலமாக மாற உள்ளது.

தற்போது புதுச்சேரியில் மூன்று பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் தற்போது பச்சை மண்டலமாக உள்ளன. உமிழ்நீர் பரிசோதனையில் புதுச்சேரி இரண்டாவது இடத்தில் உள்ளது"எனத் தெரிவித்தார்.

சிறு, குறு நிறுவனங்கள் கடன் வழங்குவது குறித்தும், தொழிற்சாலைகளுக்கு கடன் வழங்குதல், கட்டுமானப் பணிகளுக்கு சில சலுகைகள் வழங்குதல் உள்ளிட்டவை அடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில், ஏழை எளிய மக்களுக்கு நிதியை உருவாக்குகின்ற அம்சம் எதுவும் இல்லை என்று விமர்சித்துள்ளார், நாராயணசாமி.

மேலும், மாநிலத்தின் நிதி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என்றும், மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரியில் ஊரடங்கை தளர்த்துவதற்கு மக்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், இதுகுறித்து 17ஆம் தேதி பிரதமர் அறிவித்தபின்பு புதுச்சேரியில் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, மக்கள் பொறுப்புடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க பாடுபடுகின்ற அனைத்துத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதையும் பார்க்க: பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் மூலம் வீடு வாங்குவோர் பயனடைவர் - மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.