புதுச்சேரியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. சில தனியார் அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு பரப்புரையும் நடத்தப்படுகிறது.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி முழுவதும் கரோனா விழிப்புணர்வு வேன் மூலம் பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒலிபெருக்கி வேன் ஏற்பாடு செய்யப்பட்டு தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பரப்புரை விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் சலுகைகளை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர்