புதுச்சேரி சட்டமன்ற ஊழியர் ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சட்டப்பேரவை அலுவலகம் மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நகராட்சி சார்பில், சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, சட்டமன்ற வளாகம் அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் துரிதகதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : மத்தியப் பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்?