புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த சில வாரங்களாக தொகுதிக்கு சென்று கட்டுப்படுத்தபட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கியும், மற்ற பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கியும் வந்தார்.
இந்த நிலையில், செப்டம்பர் 2ஆம் தேதி அவருக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.