புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் வருகிறார். அவரின் வருகையையொட்டி பல்கலைக்கழகம் முழுவதும் மத்தியப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இன்று நூற்றுக்கணக்கான காவல் துறையினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் புகுந்து, கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து 20ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவந்த பல்கலைக்கழக மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். அப்போது இன்குலாப் ஜிந்தாபாத் என்றும் போராட்டம் வெல்லட்டும் என்றும் மாணவர்கள் முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வில் மாணவர்கள் ஸ்கெட்ச், வண்ண பென்சில்கள் பயன்படுத்த தடை