புதுச்சேரி அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, காலாப்பட்டு பகுதியில் உள்ளது. இக்கல்லுரிக்கு செல்ல சாலை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், கடந்த ஓராண்டாக பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது எனவும் மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கல்லூரியில் செய்துதரப்படவில்லை எனக்கூறி, சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள், லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, கல்லூரிக்கு செல்ல சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்துதரக் கோரியும், உடனடியாக பேராசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: நில உரிமைக்காக மண்ணில் புதைந்து விவசாயிகள் சத்தியாகிரகம்