புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா நோய் தொற்று உள்ளதா என கண்டறியும் சிறப்பு பரிசோதனை முகாம் பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று ஒரு நாள் நடைபெறும் இம்முகாமில் முதலமைச்சர் நாராயணசாமி முதல் பரிசோதனையை செய்து கொண்டார். அதன்பின்னர் பேரவைத்தலைவர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிசோதனைகளை செய்துகொண்டனர்.
ஆர்டி-பிசிஆர் (real time polymirst chain reaction) பரிசோதனை முறைப்படி நடத்தப்படும் இந்த சோதனையில், தொண்டையிலிருந்து உமிழ் நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் நாளை தெரியவரும் என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்தார். மேலும் அவர், “அரிசி, காய்கறிகள் வழங்குவது என சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகுவதால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில் 100 விழுக்காடு உண்மையான முடிவை கண்டறியமுடியும். விரைவில் பணியில் உள்ளவர்களுக்கும் இச்சோதனை செய்யப்படும். பொதுமக்களுக்கு இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சோதனையை நேற்று (ஏப்ரல் 22) துவங்கி விட்டோம்” என்றுத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கு பை பை - மீண்டெழுந்த மருத்துவர்!