இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அந்தவகையில், புதுச்சேரியில் கோவிட் -19 வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் அம்மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வைரஸ் பரவும் என்பதால், சுற்றுலா தளமான படகு குழாம் பாரதி பூங்கா ஆகியவை மூடப்பட்டன.
இதனிடையே, பிரதமர் மோடி நாளை காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் மக்கள் ஒரு பகுதியில் அதிக்கம் கூடுவதை தடுக்கும் நோக்கில் புதுச்சேரி கடற்கரை சாலையில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு செல்லும் அனைத்து பகுதிகளிலும் தடுப்புகள் போட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ்: புதுமையான முறையில் விழிப்புணர்வு