புதுச்சேரி காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் உள்ளது. ஊரடங்கு காரணமாக 80 நாள்களுக்குப் பிறகு கடந்த திங்கள்கிழமையன்று கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
அன்று முதல் குறைந்த அளவிலான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர். இன்று (ஜூன் 13) சனிக்கிழமை என்பதால் அதிகளவில் பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஊரடங்கு, காவல்துறையினர் கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே வந்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த குறைந்த அளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். அவர்கள் முகக் கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி நின்று தரிசனம் செய்துவருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை கழுவுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
இந்நிலையில், இ பாஸ் இல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
இதையும் படிங்க... அன்னையர் தின பிரார்த்தனை: ஆலயம் சென்று திரும்பிய பெண்ணுக்கு கரோனா?