ETV Bharat / bharat

“நாராயணசாமிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்”-  கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமிக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் என ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. கூறியுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pudhucherry Peoples against Narayanaswamy  Pudhucherry News  Congress  Mla Dhanavel  புதுச்சேரி காங்கிரஸ் கோஷ்டி பூசல்  நாராயணசாமி  தனவேல்  காங்கிரஸ்  Narayanaswamy

author img

By

Published : Jun 4, 2020, 11:17 PM IST

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவரின் ஆட்சியையும், கட்சியையும் எம்.எல்.ஏ. தனவேல் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் எம்.எல்.ஏ. தனவேல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு கொறடா அனந்தராமன், சபாநாயகர் சிவகொழுந்துவிடம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சபாநாயகர் தன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என எம்.எல்.ஏ. தனவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.எல்.ஏ. தனவேலின் முழுமையான விளக்கத்தை கேட்டறிந்த பிறகு இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ. தனவேலுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், அரசு கொறடா அனந்தராமனின் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்பேரில் சபாநாயகர் சிவகொழுந்துவை எம்.எல்.ஏ. தனவேல் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. தனவேல் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மற்றொரு தேதி ஒதுக்குவதாக சபாநாயகர் சிவக்கொழுந்து தெரிவித்தார். முதலமைச்சர் நாராயணசாமியின் நடவடிக்கைகளால் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் பாலன், எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், லட்சுமி நாராணயன் ஆகியோரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே இவர்களை சரிகட்ட என் மூலமாக நடவடிக்கை எடுக்க பார்க்கிறார்கள். மேலும் இந்த ஆட்சியின் மீது மக்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆகவே முதலமைச்சருக்கும், சமூக நலத்துறை அமைச்சருக்கும் மக்கள் சரியான பாடத்தை தேர்தலில் புகட்டுவார்கள்” என்றார்.

இதையும் படிங்க:தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.