இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் வரைந்ததையும், இதனை ஆதரிக்கும் வகையில் பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் கண்டித்து புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சுதேசி மில் அருகே தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க... பிரான்ஸ் தேவாலயம் அருகே தாக்குதல் நடத்தியது யார்? - வெளியான பரபரப்பு தகவல்கள்