புதுச்சேரியின் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் எதிர்ப்பை மீறி நேற்று (ஜூன் 20) புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தபின்பு திமுக முன்னாள் அமைச்சரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து ஆட்சியை நடத்தவிடாமல் மக்கள் விரோதப் போக்கை கடைபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். பட்ஜெட் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கும் வகையிலும், மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பட்ஜெட்டிற்கு தனது ஒப்புதல் இல்லை என்று கூறியுள்ளார்.
அதனால், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்காது என மிரட்டும் அளவிற்கு அவர் துணிந்துள்ளார். கரோனா தொற்றுப் பரவத் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், மக்களைச் சந்திக்க வெளியே வந்தார்.
மேலும், அரசுக்கு நெருக்கடியை கொடுக்கின்ற பெயரில், மக்களுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார். மக்கள், அரசியல் தலைவர்கள், அரசு ஊழியர்களை மிரட்டுவதை கிரண்பேடி நிறுத்திக்கொள்ளவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'தெரு விளக்கு வெளிச்சத்துல முன்னேறி வருவோம்' - நரிக்குறவர் மாணவியின் சாதனை