இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள். 113 பேர் சிகிச்சையில் உள்ளனர். 99 பேர் குணமடைந்துள்ளனர்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் நோய்த் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. மே மாதம் முதல் ஜூன் வரை நோய்த் தொற்று சராசரியாக ஏழு விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் 6 மாதங்களுக்கு நோய் தடுப்புக்கு தயாராக சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சரை கேட்க உள்ளோம்.
மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள் தேவை. இது குறித்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். பொதுமக்கள் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் முதல் முறை 500 ரூபாயும் இரண்டாவது முறை ஆயிரம் ரூபாயும் அண்டை மாநிலங்களில் அபராதம் வசூலிப்பது போல் இங்கும் கடுமையாக அபராதம் வசூலிக்கப்படும். சுகாதாரத் துறை 24 மணி நேரம் செயல்பட்டாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் நோயை தடுக்க முடியாது" என்றார்.
முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர்
புதுச்சேரி: முகக் கவசம் அணியவில்லை என்றால் ரூ. 500, 1000 என அண்டை மாநிலங்களில் விதிப்பது போல் புதுச்சேரியிலும் கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியுள்ளார்.