ETV Bharat / bharat

நேரில் வரவேண்டாம் வாட்ஸ் அப்பில் புகாரளியுங்கள்- புதுச்சேரி அரசு அறிவிப்பு! - வாட்ஸ் அப்பில் புகார் எண்

புதுச்சேரி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை முதலமைச்சருக்கு வாட்ஸ்-அப் மூலம் தெரிவிக்குமாறு முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

pudhucherry cm office announced whats app complaint no due to corona fear  புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம்  வாட்ஸ் அப்பில் புகார் எண்  முதலமைச்சர் நாராயணசாமி
நேரில் வரவேண்டாம் வாட்ஸ் அப்பில் புகாரளியுங்கள்- புதுச்சேரி அரசு அறிவிப்பு
author img

By

Published : Mar 21, 2020, 5:03 PM IST

இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கரோனா வைரஸ் எளிதாக பரவுவதற்கு முக்கிய காரணியாக விளங்குவது அதிக அளவில் மக்கள் ஒன்று கூடுவதாகும்.

எனவே, அதனை தவிர்க்கும் பொருட்டு மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக அளவில் மக்கள் கூடும் இடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்க முதலமைச்சர், அமைச்சர்களை சந்திக்க சட்டப்பேரவைக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். இது கரோனா வைரஸ் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

pudhucherry cm office announced whats app complaint no due to corona fear  புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம்  வாட்ஸ் அப்பில் புகார் எண்  முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

எனவே, இந்த அசாதாரணமான நிலையை கருத்தில்கொண்டு, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் பொதுமக்கள் உடல் நலன் கருதி, தங்களின் குறைகள், கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவிக்க நேரில் வராமல், 9345375069 என்கிற தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த ஏற்பாடு வரும் 31ஆம் தேதிவரை தொடரும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் 31ஆம் தேதிவரை கூட்டமாக சேராமல், விலகியிருந்து கரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க அரசுடன் ஒத்துழைக்குமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம்: பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.