ETV Bharat / bharat

பட்ஜெட் நிதியை நாங்கள் செலவு செய்வதை தடுக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை - நாராயணசாமி - நாராயணசாமி

பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக அமைச்சர் சட்டப்பேரவை வளாகத்தில் வந்து தர்ணா இருக்கிறார். கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிரண் பேடி அராஜகத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.

பட்ஜெட் நிதியை நாங்கள் செலவு செய்வதை தடுக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை - நாராயண

author img

By

Published : Jan 11, 2021, 4:50 PM IST

புதுச்சேரி: பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியை நாங்கள் செலவு செய்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு அதைத் தடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தடையாக உள்ளதாகவும் எனவே அவரை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே மூன்று நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இதனிடையே சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தனது துறையின் கீழ் உள்ள 15 முக்கிய கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவும், ஆலோசனை நடத்த நேரம் கோரியும் துணை நிலை ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு, பின்னர் முடிவு எடுக்கப்படும் என துணை ஆளுநர் கிரண் பேடி பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில், நலத்திட்ட உதவிகள் தொடர்பான 15 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் கந்தசாமி காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று தொடங்கிய இப்போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.

முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அமைச்சரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கக் கூடாது என்பதற்காக அமைச்சர் சட்டப்பேரவை வளாகத்தில் வந்து தர்ணா இருக்கிறார். கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிரண் பேடி அராஜகத்தின் எல்லைக்கே சென்று விட்டார்.

பட்ஜெட் நிதியை நாங்கள் செலவு செய்வதை தடுக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை - நாராயண
பட்ஜெட்டில் ஒதுக்கும் நிதியை நாங்கள் செலவு செய்வதை தடுக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதி ஆதாரத்தை அந்தந்த துறை செலவு செய்வதை தடுப்பதற்கு ஆளுநருக்கு எந்தவித உரிமையும் இல்லை. எனவேதான் அமைச்சர் இந்த போராட்டத்தில் அமர்ந்துள்ளார். நான் அதிகாரிகளுடன் பேசி உடனடியாக அவைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிடுவேன் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.