ETV Bharat / bharat

'குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரேநாளில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய்!' - business news in tamil

டெல்லி: குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள் ஒரேநாளில் 12 ஆயிரத்து 200 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

loan to MSME
loan to MSME
author img

By

Published : Jun 12, 2020, 6:56 AM IST

கரோனா வைரசால் (தீநுண்மி) பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை (MSME) ஊக்குவிக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு சமீபத்தில் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை (Emergency Credit Line Guarantee Scheme - ECLGS) அறிவித்தது.

சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படும் இந்த மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டம்தான் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பிணையில்லா கடன் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின்படி, முதல் 12 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்த வேண்டாம். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. அப்படிப் பார்க்கையில் கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் மொத்தம் நான்கு ஆண்டுகள்.

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து வங்கிகளும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று (ஜூன் 12) நிர்மலா சீதாராமனின் அலுவலக ட்விட்டரில், "2020 ஜூன் 9 நிலவரப்படி, 100% அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின்கீழ் 24,260.65 கோடி ரூபாய் கடன் வழங்க பொதுத் துறை வங்கிகள் அனுமதித்துள்ளன.

அதன்படி, ஒரேநாளில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 12,200 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • As of 9 June 2020, #PSBs have sanctioned loans worth Rs 24,260.65 crore under the 100% Emergency Credit Line Guarantee Scheme, out of which Rs 12,200.65 crore have been disbursed. Here are the bank-wise and state-wise details. #AatmanirbharBharat #MSMEs pic.twitter.com/e1KEj5lVzn

    — NSitharamanOffice (@nsitharamanoffc) June 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது ஒருபுறமிருக்க, தங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கவில்லை என குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்துவருகின்றன. இது தொடர்பாக நிர்மலா சீதாராமன், 'கடன் கொடுக்க வங்கிகள் தயங்கினால் எங்களிடம் கூறுங்கள் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவால் மோசமடைந்துவரும் உலகம்: வருந்தும் உலக சுகாதார அமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.