ஸ்ரீநகர்: ஜம்மு & காஷ்மீர் நிர்வாகம், முக்கிய தொழிலதிபர் உள்பட 28 நபர்களுக்கு எதிராக போடப்பட்டிருந்த கடுமையான பொது பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது உத்தரப்பிரதேச சிறைகளில் 22 பேரும், ஆறு பேர் காஷ்மீர் சிறைகளிலும் உள்ளனர். காஷ்மீர் பொருளாதார கூட்டணியின் (கேஇஏ) தலைவரும், முக்கிய தொழிலதிபருமான முஹம்மது யாசின் கானுக்கு எதிரான பிஎஸ்ஏவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ஜே & கே உள்துறை அமைப்பின் மூத்த அலுவலர் ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.