இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மக்களவை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை பாஜக தலைவர்கள் பொது மேடைகளில் நிகழ்த்திவருகின்றனர்.
டெல்லி வன்முறையில் அப்பாவி உயிர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அவரது கட்சித் தலைவர்கள்தான் கலவரத்தை ஏற்படுத்தி மக்களைக் கொல்ல தூண்டினர். அவர்கள் இந்த அறிக்கைகளை தாங்களாகவே செய்தார்களா? இல்லை. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுமாறு கட்சித் தலைமையால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர்.
டெல்லியில் நடந்தது ஒரு கலவரம் அல்ல, ஆனால் ஒரு 'திட்டமிட்டப் படுகொலை அல்லது இனப்படுகொலை' என்றுதான் நான் சொல்லுவேன். முழுச் சம்பவத்திற்கும் அரசு உடந்தையாக இருந்தது. நான்கு இளைஞர்களை தேசியக் கீதத்தை படிக்க வேண்டுமென காவல் துறையினர் எவ்வாறு கட்டாயப்படுத்தினர் என்பதை உலகம் முழுவதும் பார்த்தது. இந்த நான்கு பேரில் ஒரு நபர் இறந்துள்ளார்.
டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கும், 2002 குஜராத் கலவரங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு நிகழ்வுகளிலும் அரசு வன்முறை தொடங்கிய இரண்டு நாட்களுக்கு அமைதியாக இருந்தது” எனக் கூறினார்.
இதையும் படிங்க : பேருந்து,டேங்கர் லாரி, ஜீப் மோதல்: 8 பேர் பலி, 22 பேர் காயம்!