ETV Bharat / bharat

'வேதனையாக இருந்தாலும் அவனை எண்ணி பெருமை கொள்கிறோம்' - இன்னுயிர் ஈந்த சந்தோஷ் பாபுவின் பெற்றோர்! - இன்னுயிர் ஈந்த சந்தோஷ் பாபுவின் பெற்றோர்

ஹைதராபாத்: தங்களுடைய மகன் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி பெருமை கொள்வதாக சீனாவின் தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ அலுவலர் சந்தோஷ் பாபுவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Parents of martyred Army officer
Parents of martyred Army officer
author img

By

Published : Jun 17, 2020, 3:07 AM IST

Updated : Jun 17, 2020, 5:42 AM IST

கடந்த ஒரு மாத காலமாக இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் பதற்றம் நிலவிவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, பதற்றம் தணிந்திருந்தது.

இச்சூழலில், கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்பட மூன்று பேர் வீரமரணம் அடைந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தெலங்கானா மாநிலம் சூர்யபேட்டையைச் சேர்ந்த ராணுவ அலுவலர் சந்தோஷ் பாபுவும் ஒருவர். 37 வயதான இவருக்கு மனைவியும், ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் மூவரும் டெல்லியில் வசிக்கின்றனர்.

குடும்பத்தோடு சந்தோஷ் பாபு
குடும்பத்தோடு சந்தோஷ் பாபு

தனது மகனின் வீரமரணம் குறித்து அவரது தாய் மஞ்சுளா பேசுகையில், “எனக்கு சந்தோஷ் பாபு ஒரே மகன். ஒரு தாயாக அவனின் மரணம் எனக்கு வேதனையளித்தாலும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அவனை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவன் என்னிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு பேசினான். அப்போது அவனிடம் எல்லைப் பதற்றம் குறித்து விசாரித்தேன்.

செய்தியில் பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்பட்டுவிட்டதாகக் கூறுகிறார்களே என்று அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் செய்திகளை நம்பாதீர்கள், உண்மையில் இங்கு நடப்பதே வேறு, விஷயம் கொஞ்சம் சீரியஸாக போய் கொண்டிருக்கிறது என்றான். உடனே நான் அவனைக் கவனமாக இரு என்று கூறினேன். ஆனால் இன்று அவன் இறந்துவிட்டான்” என்றார் கண்ணீரோடு.

வீரமரணமடைந்த ராணுவ அலுவலர் சந்தோஷ் பாபு
வீரமரணமடைந்த ராணுவ அலுவலர் சந்தோஷ் பாபு

மகனை இழந்து கனத்த இதயத்தோடு பேசிய சந்தோஷ் பாபுவின் தந்தை உபேந்தர், “எனக்குச் சிறு வயதிலிருந்தே இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது பூர்த்தியாகவில்லை. அதனால் என் மகனாவது நாட்டுக்காகச் சேவையாற்ற வேண்டும் என்று எண்ணி, அவனை ஆறாவது படிக்கும்போதே சைனிக் பள்ளியில் (ராணுவத்தில் சேர்வதற்குத் தயார்படுத்தும் பள்ளி) சேர்த்துவிட்டேன்.

அங்கு தேர்ச்சிபெற்ற அவன் 2004ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தான். இளம் வயதிலேயே திறமைமிக்கவனாக இருந்த அவன் 37ஆவது வயதிலேயே உயர் பதவியை அடைந்தான். இன்று நாட்டுக்காக அவன் வீரமரணம் அடைந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். இருப்பினும், ஒரு தந்தையாக மிகுந்த மன வேதனையடைகிறேன்” என்றார்.

'ஒருபுறம் சோகமாக இருந்தாலும், அவனை எண்ணி பெருமை கொள்கிறோம்'

நாட்டுக்காக இன்னுயிர் ஈந்த சந்தோஷ் பாபுவின் உடல் நாளை அவரின் சொந்த ஊரான சூர்யபேட்டைக்கு எடுத்துவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று மாவட்டக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், சந்தோஷ் பாபுவின் குடும்பத்துக்கு எப்போதும் அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார். மேலும், சந்தோஷ் பாபுவின் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்ய அத்துனை ஏற்பாடுகளும் செய்துதரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'அப்பா மாறி நானும் மிலிட்ரி ஆபிசர் ஆக போறேன்' - உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மகன்

Last Updated : Jun 17, 2020, 5:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.