ETV Bharat / bharat

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம்

புதுச்சேரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் இஸ்லாமிய வகுப்பினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சி.ஏ.ஏவிற்கு எதிராக புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் போராட்டம்

author img

By

Published : Feb 25, 2020, 5:33 PM IST

மத ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்தும்வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்ட மக்கள் விரோத கறுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுச்சேரியை அடுத்துள்ள கோட்டக்குப்பம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசிற்கு எதிராக நடைபெற்ற இப்போராட்டத்தில் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சி.ஏ.ஏ.விற்கு எதிராகப் புதுச்சேரியில் இஸ்லாமியர்கள் கடையடைப்புப் போராட்டம்

மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்: சிஏஏவிற்கு எதிராக தீர்மானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.