உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் நிலையில், அதன் தாக்கத்தை இந்தியா மருத்துவ நிறுவனங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவப் பொருட்களில் 67 விழுக்காடு சீனாவில் இருந்தே வருகிறது. எனவே, சீனாவை மையமாக வைத்து இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நிலைமை எப்போது சீராகும் என்ற எதிர்பார்ப்பில் நிறுவனங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
இது குறித்து இந்திய மருந்தக கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுதர்ஷன் பேசுகையில், 'அனைத்து நிறுவனங்களும் நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. அரசின் ஒத்துழைப்புடன் நிலைமையைக் கட்டுக்குள் வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
ஆன்டி பயாட்டிக்ஸ், வைட்டமின் உள்ளிட்ட இடைநிலை மருத்துவப் பொருட்களுக்கு சீனாவின் தேவையையே இந்தியா நம்பியுள்ளது. எனவே, அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் சோதனைக் காலமாகக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்திய மருந்தகச் சந்தையில் சீனாவின் மதிப்பு 2 ஆயிரத்து 405 மில்லியன் டாலராக உள்ள நிலையில், கரோனாவின் தாக்கத்தை சமாளிக்க முடியுமா என வர்த்தகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'காவிரி டெல்டா பகுதி, இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!