தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் கூட்டுறவு வங்கியின் பணப்பரிமாற்றத்தில் சரத் பவாரும், அவரது உறவினருமான அஜித் பவாரும் மோசடியில் ஈடுபட்டதாக மீது குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையின் பல்லார்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சரத் பவார் இன்று செல்ல இருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அதிகளவில் அங்கு குவிய வாய்ப்பிருப்பதாக காவல் துறை வட்டாரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், இந்த விவகாரம் அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத் துறையினர் முன் ஆஜராகும் சரத்பவார்..!