நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய வகையில் விளங்கிய டிக்டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று (ஜூன் 29) தடை விதித்தது.
இதனை பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள தொலைத் தொடர்பு உபகரணங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரும் பேராசிரியருமான என்.கே.கோயல், ”பயனாளர்களின் முக்கியத் தரவுகளை சீனா பகிர்வதால், அந்நாட்டுச் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை அவசியமாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தச் செயலிகளை பயன்படுத்தும் இந்தியர்களின் முக்கியத் தகவல்களை சீனா பகிர்கிறது. நம்முடைய தகவல்களுக்கு நாமே உரிமையாளர்கள். மற்றவர்கள் ஏன் நம்முடைய தகவல்களை எடுக்க வேண்டும்? அதனை ஏன் வணிகம் சார்ந்து பயன்படுத்த வேண்டும்? தகவல்கள் பகிரப்படக் கூடாது. அதனை தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குறுகிய காலத்தில் அதிகரித்த பயனர்கள் - உலக சமூக ஊடக தினம் ஸ்பெஷல்!