காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தரப்பிரதேச தேசிய செயலாளர் பிரியங்கா காந்தி தன் தேர்தல் பரப்புரையை பிரயாக்ராஜில் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆதித்யநாத் செய்ததாகக் கூறப்படும் அனைத்தும் பொய்யானவை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாஜக செய்ததாகக் கூறி பரப்புரை செய்பவை யாவும் பொய்யைானவை எனவும், அவர்கள் சொல்வதற்கும் இங்குள்ள கள நிலவரத்திற்கும் பெரிய வித்தியாசம் இருப்பாகக் கூறினார்.
தான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவரையும் சந்தித்ததாகவும், அனைவரும் பாஜக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளதாகவும் கூறினார். பிரியங்கா மேற்கொண்டுள்ள பரப்புரை மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் முடிவடைகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது.