டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத்தில் இரும்பு விற்பனை செய்யும் நபர் ஒருவர் இன்று காலை அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். மேலும், அவரை விடுவிக்க வேண்டுமெனில் ஒரு கோடி ரூபாய் அளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "பாக்பத்தில் இன்று இரும்பு விற்பனையாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. வணிகர்களுக்கும் பாதுகாப்பில்லை.
இந்த அரசாங்கம் தேர்தல் நேரத்தில் வெற்று அறிவிப்புகளை மட்டும்தான் வெளியிட்டுவருகிறது. மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குற்றவியல் நடவடிக்கைகள் பரவலாக நடைபெற்றுவருகிறது என தொடர்ந்து காங்கிரஸ் குற்றம் சாட்டிவருகிறது.