முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்த சேவை உள்பட பி, சி குழு மாநில ஊழியர்களுக்கான ஆள்சேர்ப்பு பணியில் பெரிய மாற்றத்தை மேற்கொண்டுவருவதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
மாநில அரசின் இந்த அறிவிப்பு வேலையில்லாமல் சிரமத்தை சந்தித்துவரும் இளைஞர்களின் "வலியை" மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாநில அரசின் அறிவிப்பு வெளியானதிற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ள பிரியங்கா, "ஒப்பந்தம் = வேலைகளில் இருந்து மரியாதையாக வெளியேறு. ஐந்தாண்டு ஒப்பந்தம் = இளைஞர்களை மதிக்காத சட்டம்.
இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதன் நோக்கம் என்ன? இளைஞர்களின் வலியை நீக்குவதற்கு பதிலாக அரசாங்கம் வலியை அதிகரிக்கும் திட்டத்தை கொண்டுவருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.