குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பிற மாநிலங்களிலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கு திரும்புவதால் அவர்கள் மூலம் கரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்துவருவதாக உ.பி., முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிக்கை வெளியிட்டார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது, “கரோனா தொற்றால் மாநிலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உ.பி.யில் மொத்தமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 228 என்று மாநில அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்த தொற்றின் புள்ளி விவரங்களின் அடிப்படை என்ன? திரும்பி வந்த குடிபெயர்ந்த தொழிலாளர்களின் விழுக்காடு எங்கிருந்து அவருக்கு கிடைத்தது. முதலமைச்சரின் அறிக்கையில் ஏதேனும் உண்மை இருந்தால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். மேலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்களையும் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: ராஜிவ் காந்தி படுகொலை... என் அம்மாவையும் விட்டுவைக்கவில்லை: எம்.எல்.ஏ. விஜயதாரணி