இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தான் வகித்த பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் பதவி வகித்த அந்த இடத்திற்கு மாற்றாக பிரியங்கா காந்திதான் சரியான தேர்வாக இருப்பார்.
இளைஞர்கள் அதிகமுள்ள நமது இந்தியாவில் இளைஞர்களுக்கு ஏற்ற தலைவராக பிரியங்கா காந்தி செயல்படுவார். அவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கான தேவையை அவரால் நிச்சயமாக பூர்த்தி செய்ய முடியும். பிரியங்கா தலைவராக பதவியேற்றால் கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பு இருக்கும். மக்களும் ராகுலை ஏற்றது போல் பிரியங்காவையும் ஏற்றுக் கொள்வார்கள்” என்றார்.