இது குறித்து அவர் அனுப்பிய கடிதத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பாக கொண்டுச் செல்ல உ.பி.யில் 1000 பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான செலவுகளை காங்கிரஸ் கட்சி ஏற்கும். ஏனென்றால் புலம்பெயர்ந்தவர்களின் அன்றாட விபத்துக்கள் தாங்க முடியாத துன்பங்களை ஏற்படுத்துகிறது.
மனிதாபிமானமற்ற நிலைமைகளில் சிக்கியுள்ளோம். எங்கள் உழைக்கும் உடன் பிறப்புகளும், அவர்களின் குழந்தைகளும் ஒரு நெருக்கடியான நிலையை சந்திக்கிறார்கள். எனவே பேருந்துகளை இயக்க அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்து, 22 பேர் படுகாயமடைந்தனர் என்பதும் மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பண்டா பகுதி சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்து, 17 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் லாரி மீது கார் மோதி விபத்து: மூவர் உயிரிழப்பு!